சொக்கம்பட்டி பகுதியில் நீண்ட நேரமாக ஒரே இடத்தில் நிற்கும் காட்டு யானை - அச்சத்தில் பொதுமக்கள்
தென்காசி, 21 அக்டோபர் (ஹி.ச.) தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டி பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் தற்போது யானை ஒன்று நீண்ட நேரமாக நின்று கொண்டிருக்கும் நிலையில், தகவல் அறிந்து விரைந்து சென்ற கடையநல்லூர் வனத்துறையினர் யானை நீண்ட ந
Wild elephant


தென்காசி, 21 அக்டோபர் (ஹி.ச.)

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டி பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் தற்போது யானை ஒன்று நீண்ட நேரமாக நின்று கொண்டிருக்கும் நிலையில், தகவல் அறிந்து விரைந்து சென்ற கடையநல்லூர் வனத்துறையினர் யானை நீண்ட நேரமாக ஒரே இடத்தில் நிற்பதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்தனர்.

அப்பொழுது, யானைக்கு செரிமான கோளாறு பிரச்சினை ஏற்பட்டு வயிற்றுப் போக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், இது தொடர்பாக உடனடியாக கால்நடை மருத்துவ குழுவினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தற்போது, நெல்லையிலிருந்து கால்நடை மருத்துவ குழுவினர்கள் சொக்கம்பட்டி பகுதிக்கு வந்து கொண்டிருக்கும் நிலையில், அவர்கள் வந்து யானையின் உடல்நலம் குறித்த பரிசோதனை மேற்கொண்ட பிறகே யானையை காட்டுக்குள் விரட்டுவது தொடர்பாக ஆலோசனை செய்யப்படும் என வனத்துறையினர் தற்போது தெரிவித்துள்ள நிலையில், நீண்ட நேரமாக காட்டு யானை ஒன்று சொக்கம்பட்டி பகுதியில் நின்று கொண்டிருக்கும் சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / ANANDHAN