தமிழகத்தில் தீவிரம் அடைந்துள்ள வடகிழக்கு பருவ மழை - நொய்யல் ஆற்றில் நீர் வரத்து அதிகரித்ததால், கரைபுரண்டோடும் தண்ணீர்
கோவை, 21 அக்டோபர் (ஹி.ச.) தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைய தொடங்கி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 4 இடங்களில் மிக கனமழை பெய்து உள்ளது. அரபி கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலாகும். குமரிக்கடல்
The northeast monsoon has intensified in Tamil Nadu: Heavy rain lashes Coimbatore — water inflow in the Noyyal River increases, causing it to overflow its banks!


கோவை, 21 அக்டோபர் (ஹி.ச.)

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைய தொடங்கி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 4 இடங்களில் மிக கனமழை பெய்து உள்ளது.

அரபி கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலாகும். குமரிக்கடல் ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல் கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதனால் தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு ஒரு சில இடங்களில் கன மழையும், ஒரு சில இடங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாகவும், சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக கோவையில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழை காரணமாக நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக குனியமுத்தூர் பகுதியில் உள்ள சுண்ணாம்பு கால்வாய் அணைக்கட்டு நீர் நிரம்பியதால் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது.

Hindusthan Samachar / V.srini Vasan