அருணாச்சலேஸ்வரர் எல்லை காவல் தெய்வமான துர்க்கை அம்மன் கோவில் கேதார கௌரி விரதம்
திருவண்ணாமலை, 21 அக்டோபர் (ஹி.ச.) சிவபெருமானுக்கு உரிய எட்டு விரதங்களில் முக்கியமான விரதமாக கருதக்கூடியது கேதார கௌரி விரதம், புரட்டாசி மாதம் தொடங்கி ஐப்பசி மாதம் வரை தொடர்ந்து 21 நாட்கள் கடைபிடிக்கக் கூடிய விரதம் கேதார கௌரி விரதம், குடும்ப ஒற்றுமை
Durgai Amman


திருவண்ணாமலை, 21 அக்டோபர் (ஹி.ச.)

சிவபெருமானுக்கு உரிய எட்டு விரதங்களில் முக்கியமான விரதமாக கருதக்கூடியது கேதார கௌரி விரதம், புரட்டாசி மாதம் தொடங்கி ஐப்பசி மாதம் வரை தொடர்ந்து 21 நாட்கள் கடைபிடிக்கக் கூடிய விரதம் கேதார கௌரி விரதம், குடும்ப ஒற்றுமை, கணவரின் நலம், கன்னிப்பெண்கள் திருமணமாக வேண்டியும் இந்த விரதத்தை கடைப்பிடித்து வருகின்றனர்.

இந்த விரதத்தை கடைபிடித்து தான் பார்வதி தேவியார் சிவனிடம் இருந்து சரிபாகத்தை பெற்ற விரதம் இதுவே ஆகும், சிவபெருமானை நோக்கி தொடர்ந்து அம்மன் விரதம் இருந்த காரணத்தினால் கேதார கௌரி விரதம் என்று பெயர் வரப்பட்டதாக கூறப்படுகிறது, பெண்கள் இந்த விரதத்தை கடைபிடித்தால் கணவனை எப்போதும் பிரியாமல் இருக்கும் வரம் கிடைக்கும் என்பதும் ஐதீகம்.

தீபாவளி அமாவாசை தினமான இன்று கேதார கௌரி விரத நோன்பு எடுப்பதற்கு இன்று பிற்பகல் வரை நல்ல நேரம் என்பதால் திருவண்ணாமலை மாநகரில் உள்ள சின்னகடை வீதியில் அமைந்திருக்கும் அருணாசலேஸ்வரர் கோவிலின் எல்லை காவல் தெய்வமான துர்க்கை அம்மன் கோவிலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வீட்டில் செய்த வடை பலகாரங்களுடன், வாழை பழம், சாமந்தி பூ, நோன்பு கயிறு உள்ளிட்ட பூஜை பொருட்கள் அடங்கிய நோன்பு சட்டியுடன் குருக்கள் கலச பூஜை செய்து அமைக்கப்பட்டிருந்த இடத்தில் நோன்பு சட்டியை கொடுத்து பெண்கள் 9 முறை சுற்றி அலறி இல்லை பூ உள்ளிட்டவற்றை கலசத்தில் மீது தூவி தீபாரதனை நடைபெற்று.

பின்னர் மனமுருக துர்க்கை அம்மனை வேண்டி நோன்பு சட்டியை வீட்டிற்கு எடுத்துச் சென்றனர், கேதார கௌரி விரத நோன்பு எடுப்பதற்காக ஏராளமானோர் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக காத்திருந்து மழையையும் பொருட்படுத்தாமல் நோன்பு எடுத்துச் சென்றனர்.

கேதாரி கௌரி நோன்பு எடுப்பதற்காக இன்று காலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை மாநகரில் உள்ள தேரடி வீதியில் நோன்பு கயிறு, தேங்காய், வாழைபழம், பூக்கள் உள்ளிட்டவற்றை வாங்குவதற்காக குவிந்தனர், அதனைத் தொடர்ந்து துர்க்கை அம்மனுக்கு சீகக்காய் தூள், மஞ்சள் தூள், பச்சரிசி மாவு, பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட அபிஷேக பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்து பூ மாலை அலங்காரத்துடன் தீபாரதனை நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து தீபாவளி அமாவாசை முன்னிட்டு ஆயிரக்கணக்கானவர்கள் கேதார கௌரி விரத நோன்பு எடுத்து சென்று வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN