Enter your Email Address to subscribe to our newsletters
கள்ளக்குறிச்சி, 21 அக்டோபர் (ஹி.ச.)
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள திருநாவலூர், ஆசனூர், எலவனாசூர்கோட்டை, களமருதூர், சேந்தநாடு உட்பட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் நேற்று இரவு முதல் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.
இதனால் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையம் திருநாவலூர் கெடிலம் ஆசிரியர் நகர் சின்னகுப்பம் குச்சிபாளையம் குமாரமங்கலம் மணலூர் உட்பட தாழ்வான பகுதியில் உள்ள கிராமங்களில் மழை நீர் தெருக்களில் தேங்கி நிற்பதோடு மழை நீர் வெளியேற வடிகால் வசதி இல்லாததால் வீடுகளுக்குள் புகுந்தது.
சுமார் 100க்கும் மேற்பட்ட வீடுகளில் புகுந்த மழை நீரை குடியிருப்பு வாசிகள் பாத்திரத்தின் மூலம் மழை நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பருவ மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் மழை நீரை வெளியேற்ற வடிகால் வசதியை உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / ANANDHAN