Enter your Email Address to subscribe to our newsletters
திண்டுக்கல், 21 அக்டோபர் (ஹி.ச.)
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே தொடர் கனமழை காரணமாக, வைகை அணையின் நீர்மட்டம் விறுவிறுவென உயர்ந்து வருவதை அடுத்து, வைகை ஆற்றில் உபரிநீர் திறந்துவிடப்பட்டதால், வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வைகை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
மேற்குத் தொடர்ச்சி மலை உட்பட தேனி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை கடந்து விருவிருவென நிரம்பி விரைவில் முழு கொள்ளளவையும் எட்டும் நிலை ஏற்பட்டுள்ளது,
இதனால் முதற்கட்டமாக வைகை அணையிலிருந்து ஆற்றில் சுமார் ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது, இதனை அடுத்து திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த அணைப்பட்டி வழியாக செல்லும் வைகை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது,தொடர் கன மழையும் பெய்து வருவதால் ஆற்றுநீருடன் காற்றாற்று வெள்ளமும் இணைந்து,வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது,
இதனால் தமிழக அரசு உத்தரவுப்படி நிலக்கோட்டை வட்டாட்சியர் விஜயலட்சுமி தலைமையிலான வருவாய் மற்றும் பேரிடர் மீட்புபணிகள் துறையினர், வைகை ஆற்றின் கரையோரம் உள்ள கன்னாபட்டி,சித்தர்கள்நத்தம், அணைப்பட்டி,விளாம்பட்டி,
நடகோட்டை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கரையோர கிராம மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் ஆற்றில் யாரும் இறங்க கூடாது,குழந்தைகள் கால்நடைகளை கண்காணிக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
மேலும் தமிழக அரசு மற்றும் வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி தொடர்ந்து மழை தீவிரமாக அடைந்து வருவதால், வைகை ஆற்றிலும் நீரின் அளவு அதிகரித்து வருகிறது,
இதனால் தாழ்வான பகுதிகளை நிலக்கோட்டை வருவாய்த்துறையினர் மற்றும் ஊரக வளர்ச்சி துறையினர் அடங்கிய குழுவினர் ஆங்காங்கே தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN