தாறுமாறாக ஓடிய அரசு பேருந்து பயணிகள் மீது மோதி 3 பேர் படுகாயம் -19 வயது இளம் பெண் உயிரிழப்பு
கோவை, 22 அக்டோபர் (ஹி.ச.) கோவை, காந்திபுரம் பகுதியில் உள்ள நகரப் பேருந்து நிலையத்தில் இன்று இரவு வாளையாருக்கு செல்வதற்காக 96 என்ற எண் கொண்டு தாழ்தள சிறப்பு சொகுசு பேருந்து கிளம்பியது. அப்பொழுது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அதன்
A government town bus in Coimbatore went out of control at the Gandhipuram bus stand, hitting passengers who were standing nearby.


கோவை, 22 அக்டோபர் (ஹி.ச.)

கோவை, காந்திபுரம் பகுதியில் உள்ள நகரப் பேருந்து நிலையத்தில் இன்று இரவு வாளையாருக்கு செல்வதற்காக 96 என்ற எண் கொண்டு தாழ்தள சிறப்பு சொகுசு பேருந்து கிளம்பியது.

அப்பொழுது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அதன் அருகில் நின்று இருந்த மற்ற மினி பேருந்து உட்பட நான்கு பேருந்துகள் மற்றும் பேருந்துக்காக காத்து இருந்த பயணிகள் மீது மோதியதில் சம்பவ இடத்திலே கடலூர் மாவட்டம், விருத்தாச்சலத்தைச் சேர்ந்த ஹரிணி என்ற பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் அங்கு நின்று இருந்தால் மதுக்கரை பகுதியைச் சேர்ந்த வின்சி, சத்யா மற்றும் அடையாளம் தெரியாத 55 வயது நபர் உட்பட மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயமடைந்த அவர்களை அங்கு இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

கோவை காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய அரசு பேருந்து பயணிகள் மற்றும் பேருந்துகள் மீது மோதிய விபத்தில் 19 வயது இளம் பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Hindusthan Samachar / V.srini Vasan