கன மழையின் காரணமாக 100 ஆண்டுகள் பழமையான தேக்கு மரம் மற்றும் அத்திமரம் சாய்ந்து விழுந்தன
சென்னை, 22 அக்டோபர் (ஹி.ச.) திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சோழவரம், செங்குன்றம் சுற்று வட்டார பகுதிகளில் காலை முதல் காற்றுடன் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. பலத்த காற்றின் காரணமாக செங்குன்றம் பேருந்து நிலையம் எதிரே ஜிஎன்டி சாலையில் 100 ஆண்டு
மரம்


சென்னை, 22 அக்டோபர் (ஹி.ச.)

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சோழவரம், செங்குன்றம் சுற்று வட்டார பகுதிகளில் காலை முதல் காற்றுடன் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது.

பலத்த காற்றின் காரணமாக செங்குன்றம் பேருந்து நிலையம் எதிரே ஜிஎன்டி சாலையில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த தேக்கு மற்றும் அத்திமரம் ஆகியவை வேருடன் சாய்ந்து சாலையில் விழுந்தன.

மரங்கள் சாய்ந்து விழுந்ததில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு கார்கள் நொறுங்கியுள்ளன.

மேலும் அருகே இருந்த இருசக்கர வாகனங்களும் இதில் சேதமடைந்துள்ளன.

இதன் காரணமாக செங்குன்றத்திலிருந்து சென்னை நோக்கி செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்குன்றம் போக்குவரத்து காவல்துறையினர் வேருடன் சாய்ந்த மரங்களை வெட்டி அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

காரை நிறுத்திவிட்டு அதன் உரிமையாளர் வெளியே சென்று விட்டதால் உயிரிழப்பு ஏதும் இல்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

Hindusthan Samachar / Durai.J