Enter your Email Address to subscribe to our newsletters
மும்பை, 22 அக்டோபர் (ஹி.ச.)
அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சி அருகே நெவார்க் நகரத்துக்கு மும்பையில் இருந்து ஏர் இந்தியா விமானம் AI 191 இன்று (அக்.22) புறப்பட்டுச் சென்றது.
இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு உள்ளதை விமானிகள் குழு கண்டறிந்தனர்.
இதையடுத்து, ஏர் இந்தியா விமானம் உடனடியாக மீண்டும் மும்பைக்கே திருப்பி விட அனுமதி கோரப்பட்டது. மும்பை விமான நிலையத்தில் அவசர தரையிறக்கத்திற்கு அனுமதி கிடைத்த பின் அங்கு விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
விமானத்தில் ஏற்பட்டுள்ள பழுது குறித்து பயணிகளிடம் தெரிவித்த விமான நிர்வாகம்,
பயணிகள் தங்குவதற்கும், உணவுக்கும் ஏற்பாடு செய்தது.
பின்னர், அவர்கள் வேறு விமானத்தில் நெவார்க் நகரத்துக்குச் செல்ல ஏற்பாடு செய்வதாகவும் அறிவித்தது.
விமான மாற்றத்தால் ஏற்பட்ட தாமதத்திற்கு பயணிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
இதேபோல் நியூவர்க் நகரத்தில் மறு மார்க்கமாக மும்பை புறப்பட இருந்த விமானம் AI 144 ரத்து செய்யப்பட்டு இருப்பதாகவும் ஏர் இந்தியா நிர்வாகம் அறிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b