Enter your Email Address to subscribe to our newsletters
கோவை, 22 அக்டோபர் (ஹி.ச.)
கோவை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த இரண்டு நாட்களில் ரூபாய் 33.6 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது.
கோவை மாவட்டத்தில் 252 டாஸ்மார்க் மதுக்கடைகள் உள்ளன. இதில் கோவை, மேட்டுப்பாளையம், துடியலூர் உள்ளிட்ட வடக்கு பகுதிகளில் 154 மதுக்கடைகளும், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு உள்ளிட்ட தெற்கு பகுதியில் 128 மது கடைகளும் உள்ளன.
தீபாவளி பண்டிகையையொட்டி இந்த மதுக்கடைகளில் விற்பனை அமோகமாக நடைபெற்றது. முந்தைய நாளே பலர் வரிசையில் நின்று மது பாட்டில்களை வாங்கிச் சென்றனர்.
தீபாவளி அன்று அனைத்து மது கடைகளிலும் விற்பனை படுஜோராக நடந்தது.
கோவை மாவட்டத்தில் தீபாவளி மது விற்பனை குறித்து டாஸ்மார்க் அதிகாரிகள் கூறும்போது,
கோவை தெற்கு பகுதியில் தீபாவளி அன்று 8 கோடியே 70 லட்சத்துக்கும் தீபாவளிக்கு முந்தைய நாளில் ரூபாய் 7 கோடியே 40 லட்சத்திற்கும் என மொத்தம் ரூபாய் 16 கோடியே 10 லட்சத்திற்கு விற்பனையானது என்றும், கோவை வடக்கு பகுதியில் தீபாவளி அன்று ரூபாய் ஒன்பது கோடியே 50 லட்சத்திற்கும் தீபாவளிக்கும் முந்தைய நாளில் ரூபாய் 8 கோடிக்கும் என மொத்தம் ரூபாய் 17 கோடியே ஐம்பது லட்சத்துக்கு மது விற்பனையானது.
கடந்த இரண்டு நாட்களில் மாவட்டம் முழுவதும் ரூபாய் 33 கோடியே 60 லட்சத்துக்கு மது விற்பனையாகி உள்ளது என்றும் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / V.srini Vasan