Enter your Email Address to subscribe to our newsletters
கேரளா, 22 அக்டோபர் (ஹி.ச.)
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் கடந்த 2019ம் ஆண்டு முதல் இயங்கி வரும் கோழி இறைச்சியை வெட்டி தரக்கூடிய தொழிற்சாலையின் காரணமாக அந்த பகுதியில் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாகவும், உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் கடந்த சில ஆண்டுகளாகவே எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், இந்தாண்டு பஞ்சாயத்து சார்பில் தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், தொழ்ற்சாலை தொடர்ந்து இயங்கி வருவதை எதிர்த்து.
நேற்று (அக் 21) அப்பகுதி மக்கள் தொடர் போராட்டம் நடத்தியதில் மக்கள் தொழிற்சாலைக்கு தீ வைத்ததாகவும் அதை தடுக்க முட்பட்ட காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகின்றது.
இந்த போராட்டத்தின் காரணமாக காவல்துறையினரும், பொதுமக்களும் எதிர்தரப்பினருமே காயம் அடைந்திருக்கிறார்கள். இந்த நிலையில், தான் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை அணைக்க வந்த வாகனத்தையும் போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தி இருக்கிறார்கள்.
தற்போது இந்த சம்பவம் தொடர்பாக ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
போராட்டத்தில் ஈடுபட்ட 300க்கு மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக கேரள போலீசார் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b