Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 22 அக்டோபர் (ஹி.ச.)
வங்கக்கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்றையதினம் சென்னைக்கு மிக கனமழை காண ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை தயார் நிலையில் உள்ளது.
அந்த வகையில் பல்வேறு திறன் கொண்ட 1436 மோட்டார் பம்புகளும், 100 எச்பி திறன் கொண்ட 150 பம்புகளும், மோட்டார் பொருந்திய 500 டிராக்டர்களும், கருவிகள் இயந்திரங்கள் என பல்வகை வாகனங்கள் 478, மர அறுவை இயந்திரங்கள் 457 தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் 210 வெள்ள நிவாரண மையமும், 106 சமையல் கூடமும், மாநகராட்சியின் 36 படகுகள் மற்றும் மீனவர்களின் படகுகள் என 103 படகுகள் தயார் நிலையில் உள்ளது.
மேலும் சென்னை மாநகராட்சி சார்பில் மழையை எதிர்கொள்ள களத்தில் 22 ஆயிரம் பணியாளர்கள் பணி செய்து வருகிறார்கள்.
Hindusthan Samachar / P YUVARAJ