45 வயது மதிக்கதக்க பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் வீச்சு
தருமபுரி, 22 அக்டோபர் (ஹி.ச.) தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே கொம்மநாயக்கனஅள்ளி புதிய தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை அவ்வழியாக சென்றவர்கள், சுமார் 45 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் கழுத்தில் கத்தியால் வெட்டப்பட்ட நிலையில் சாலையோரம் சடலமாக இருப்
Death


தருமபுரி, 22 அக்டோபர் (ஹி.ச.)

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே கொம்மநாயக்கனஅள்ளி புதிய தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை அவ்வழியாக சென்றவர்கள், சுமார் 45 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் கழுத்தில் கத்தியால் வெட்டப்பட்ட நிலையில் சாலையோரம் சடலமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்த தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன், கொலை செய்யப்பட்ட இடத்தை ஆய்வு செய்தவர்.

மோப்ப நாயை வரவழைத்து தீவிர விசாரனை மேற்கொண்டு வருகிறார்.

தொடர்ந்து சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Hindusthan Samachar / ANANDHAN