Enter your Email Address to subscribe to our newsletters
கோவை, 22 அக்டோபர் (ஹி.ச.)
தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இந்த பண்டிகையொட்டி பாதுகாப்புக்காக பட்டாசு வெடிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அத்துடன் குழந்தைகள் பட்டாசு வெடிக்கும் போது பெற்றோர் அருகில் இருந்து கண்காணிக்க வேண்டும் என்றும், அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
கோவையில் குழந்தைகள், இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பலர் பட்டாசுகளை வெடித்து தீபாவளியை கொண்டாடினர்.
இதில் ராக்கெட் வெடி, அணுகுண்டு உள்ளிட்ட அதிக சத்தத்துடன் வெடிக்கும் வெடிகளை பலர் வெடித்து மகிழ்ந்தனர்.
கோவையில் கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், பெரும்பாலான இடங்களில் ஈரப்பதமாகவே காணப்பட்டன.
அத்துடன் தீபாவளி நாளான நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் ஒரு மணி நேரம் மழை பெய்தது.
இதன் காரணமாக தீ விபத்துகள் ஏற்படவில்லை, இருப்பினும் கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பட்டாசுகள் வெடித்த போது எட்டு பேர் காயம் அடைந்தனர்.
அவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். அதில் பத்து வயது சிறுமி ஒருவருக்கு 10% அளவுவிற்கு தீக்காயம் ஏற்பட்டது. அவரை மறுத்தவர்கள் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தீபாவளி பண்டிகை அன்று மாலை வேளையில் இரண்டு பெண் குழந்தைகள், இரண்டு ஆண் குழந்தைகள் உள்பட 8 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டதாகவும், சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும், அவர்கள் 10 வயது பெண் குழந்தை மட்டும் பத்து சதவீத அளவிற்கு தீக்காயம் இருந்தது.
அந்த குழந்தையை வாடில் அனுமதித்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும், இதில் மூன்று பேருக்கு கண்களில் லேசான பாதிப்பு ஏற்பட்டது. அவர்களுக்கு கண்களில் தண்ணீரை பீச்சி அடித்து கழுவும் சிகிச்சை அளிக்கப்பட்டது என்று மருத்துவமனை முதல்வர் கீதாஞ்சலி தெரிவித்தார்.
Hindusthan Samachar / V.srini Vasan