உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு ஈபிஎஸ் பிறந்தநாள் வாழ்த்து!
சென்னை, 22 அக்டோபர் (ஹி.ச.) மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் அவருக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில்
Rweet


Amithsha eps


சென்னை, 22 அக்டோபர் (ஹி.ச.)

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் அவருக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். தேசிய பாதுகாப்பு மற்றும் ஒற்றுமையை வலுப்படுத்துவதில் உங்கள் உறுதியான தலைமை, அயராத அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது.

நமது தேசத்திற்கான உங்கள் சேவையில் உங்களுக்கு நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் தொடர்ச்சியான வெற்றி கிடைக்க வாழ்த்துகிறேன் என அந்த பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ