Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 22 அக்டோபர் (ஹி.ச.)
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI) இந்த பாஸை 'ராஜ்மார்க்யாத்ரா' செயலி மூலம் மற்றவர்களுக்குப் பரிசளிக்கும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த வருடாந்திர பாஸ் நாடு முழுவதும் உள்ள சுமார் 1,150 சுங்கச்சாவடிகள் உட்பட தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் தேசிய விரைவுச் சாலைகளில் ஓர் ஆண்டு முழுவதும் அல்லது 200 சுங்கச்சாவடி கடப்புகள் வரை தடையற்ற மற்றும் தொந்தரவு இல்லாத பயணத்தை உறுதி செய்கிறது.
ஒரு முறை ரூ. 3,000 கட்டணம் செலுத்துவதன் மூலம் இந்த பாஸை பெறலாம். இது ஒரு வருடத்திற்கு அல்லது 200 சுங்கச்சாவடி கடந்து செல்வதற்கு செல்லுபடியாகும்.
இதனால் அடிக்கடி ஃபாஸ்டாக்கை ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் நீக்கப்படுகிறது.
செல்லுபடியாகும் ஃபாஸ்டாக் கொண்ட அனைத்து வணிக நோக்கமற்ற வாகனங்களுக்கும் இந்த பாஸ் பொருந்தும்.
ஓர் ஆண்டு அல்லது 200 முறை டோல்கேட்டை கடக்கலாம் என்ற இந்த வரம்பை அடைந்த பிறகு, ஃபாஸ்டாக் வழக்கம் போலப் பயணத்திற்கான கட்டண முறைகளுக்கு
(Pay-per-trip) மாறிவிடும்.
ராஜ்மார்க்யாத்ரா செயலி மூலம் ஒரு முறை கட்டணம் செலுத்திய பிறகு, பாஸ் ஏற்கெனவே வாகனத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் ஃபாஸ்டாக்கில் இரண்டு மணி நேரத்திற்குள் செயல்படுத்தப்படும்.
NHAI ஆல் தொடங்கப்பட்ட, இந்திய தேசிய நெடுஞ்சாலைகளில் பயணத்தை எளிதாக்கும் இந்த வருடாந்திர பாஸை இப்போது எளிதாகப் பரிசளிக்கலாம்.
ஆனால்,'ராஜ்மார்க்யாத்ரா' செயலி வழியாக மட்டுமே பரிசளிக்க முடியும். இந்த செயலி Google Play Store மற்றும் iOS App Store-ல் கிடைக்கிறது.
- 'ராஜ்மார்க்யாத்ரா' செயலியைத் திறந்து, Toll Road Information -ல் 'வருடாந்திர பாஸ்' (Annual Pass) என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- அதில், Add Pass விருப்பத்தைக் கிளிக் செய்து, நீங்கள் பாஸை பரிசாக வழங்க விரும்பும் நபரின் வாகன எண் மற்றும் தொடர்பு விவரங்களை உள்ளிடவும்.
- எளிய ஓடிபி (OTP) சரிபார்ப்புக்குப் பிறகு, பணம் செலுத்தினால், அந்த வாகனத்துடன் இணைக்கப்பட்ட ஃபாஸ்டாக்கில் வருடாந்திர பாஸ் செயல்படுத்தப்படும்.
- இந்த பாஸுக்கான கட்டணத்தை UPI, டெபிட் அல்லது கிரெடிட் கார்டு அல்லது நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம். ஃபாஸ்டாக் வாலட் இருப்பை இந்தப் பணம் செலுத்துதலுக்குப் பயன்படுத்த முடியாது.
2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி தொடங்கப்பட்ட ஃபாஸ்டாக் ஆண்டு பாஸ், வெறும் இரண்டு மாதங்களுக்குள் சுமார் 5.67 கோடி பரிவர்த்தனைகள் பதிவு செய்யப்பட்டு, இருபத்தைந்து லட்சம் பயனர்களின் மைல்கல் எண்ணிக்கையைத் தாண்டியுள்ளது.
இந்த அமோக வரவேற்பு, தேசிய நெடுஞ்சாலை பயனர்களுக்கு இந்த பாஸ் ஒரு தடையற்ற மற்றும் சிக்கனமான பயண அனுபவத்தை வழங்குவதை உறுதிப்படுத்துகிறது.
எனவே, இந்த ஃபாஸ்டாக் வருடாந்திர பாஸைப் பரிசளிப்பதன் மூலம் உங்கள் அன்புக்குரியவர்களுக்குத் தடையற்ற மற்றும் சிக்கனமான நெடுஞ்சாலைப் பயணத்தை பரிசளிக்கலாம்.
Hindusthan Samachar / JANAKI RAM