Enter your Email Address to subscribe to our newsletters
கோவை, 22 அக்டோபர் (ஹி.ச.)
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் 800 பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன.
இந்த பட்டாசு கடைகளில் ஒரு வாரத்திற்கு முன்பாகவே விற்பனை தொடங்கி விட்டது. இதற்கு இடையில் கோவை மாவட்டம் முழுவதும் மழை பெய்தத. இதனால் பட்டாசு விற்பனை பாதிக்கப்பட்டது. இருந்தாலும் மழை நின்ற பிறகு பலரும் பட்டாசு கடைகளில் குவிந்தனர்.
தீபாவளிக்கு முந்தைய நாள் மற்றும் தீபாவளி அன்றும் பட்டாசு கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோது. அவர்கள் தங்களுக்கு பிடித்தமான பட்டாசுகளை தேர்வு செய்து வாங்கி சென்று வெடித்து தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த ஆண்டு கோவை மாவட்டத்தில் ரூபாய் 32 கோடிக்கு பட்டாசு விற்பனை நடந்து உள்ளதாக பட்டாசு வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது,
கோவை மாநகரில் 350 பட்டாசு கடைகள், புறநகரில் 450 பட்டாசு கடைகள் என மொத்தம் 800 பட்டாசு கடைகள் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது. இது கடந்த ஆண்டு விட குறைவு.
இதில் சிறிய கடைகளுக்கு ரூபாய் 3 லட்சம் முதல் ரூபாய் 5 லட்சம் வரைவில், பெரிய கடைகளுக்கு ரூபாய் 10 லட்சம் முதல் ரூபாய் 15 லட்சம் வரையும் என கடந்த 11 நாட்களாக வியாபாரம் நடந்து வந்தது.
தீபாவளிக்கு நான்கு நாட்களுக்கு முன்பே விற்பனை சூடு பிடித்தது. தீபாவளியையொட்டி இந்த ஆண்டு ரூபாய் 32 கோடிக்கு பட்டாசு விற்பனையாகி உள்ளது.
இது நாங்கள் எதிர்பார்த்ததில் 85% விற்பனையாகி உள்ளது என்று தெரிவித்தனர்.
Hindusthan Samachar / V.srini Vasan