Enter your Email Address to subscribe to our newsletters
புதுடெல்லி, 22 அக்டோபர் (ஹி.ச.)
இந்தியாவின் பாதுகாப்புத்துறையில் பிரம்மோஸ் ஏவுகணை முக்கிய பங்காற்றி வருகிறது. இந்தியா மற்றும் ரஷியா இணைந்து பிரமோஸ் ஏவுகணையை உருவாக்கின.
சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையில் பிரம்மோஸ் எவுகணைகள் பயன்படுத்தப்பட்டன.
3 ஆயிரம் கிலோ எடைக்கொண்ட பிரம்மோஸ் ஏவுகணை, ஒலியைவிட 3.5 மடங்கு வேகத்தில் சீறிப்பாயக்கூடியது. 300 கிலோ வெடிகுண்டுகளை சுமந்து செல்லும் திறன் கொண்டது.
இந்த ஏவுகணையின் வேகம், சீறிப்பாயும் தொலைவுகளை இந்தியா தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. தற்போது பிரம்மோஸ் ஏவுகணை 500 கி.மீ வரையிலான இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கிறது.
800 கி.மீ தொலை தாக்கும் பிரம்மோஸ் ஏவுகணை சோதனை செய்யப்பட்டு வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு இந்த சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. 800 கி.மீ தொலைவு தாக்கும் பிரம்மோஸ் ஏவுகணை சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த நிலையில் புதிய 800 கி.மீ நீட்டிக்கப்பட்ட பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணைகளை 2 ஆண்டுகளுக்குள் அறிமுகப்படுத்த இந்தியா திட்டமிட்டு உள்ளது. மாற்றியமைக்கப்பட்ட ரேம்ஜெட் எந்திரம் மற்றும் பிற மேம்படுத்தல்களுடன், ஏவுகணை 2027-ம் ஆண்டு இறுதிக்குள் முழுமையாக தயாரக இருப்பதை உறுதி செய்வதற்காக சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாக பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் 800 கி.மீ பிரம்மோஸ் ஏவுகணைகள் முதலில் கடற்படை மற்றும் ராணுவத்தில் சேர்க்கப்படும் என்றும் விமானப்படையில் சேர்க்க அதிக நேரம் எடுக்கும் என்றும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கிடையே பிரம்மோசின் எடையை குறைப்பது, தூரத்தை அதிகரிப்பது, விமானத்தில் இருந்து ஏவும் வகையில் சிறிய வகைகளை உருவாக்குவது என்று பிரம்மோஸ் ஏவுகணையின் மேம்பட்ட புதிய மாடலை கூட்டாக தயாரிப்பதற்காக பேச்சுவார்த்தைகளை இந்தியாவும் ரஷியாவும் தொடங்கின என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / JANAKI RAM