Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 22 அக்டோபர் (ஹி.ச.)
காவிரி ஆற்றில் 30,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில், டெல்டா மாவட்டங்களில் மழை தொடர்வதால் காவேரி ஆற்றில் கூடுதலாக நீர்வரத்து ஏற்படலாம் என்று அறியப்படுகிறது.
திருச்சி முக்கொம்பு மேலணைக்கு தற்போதைய நிலவரப்படி 14,000 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.இன்று நள்ளிரவுக்கு மேல் மேட்டூர் அணையில் இருந்து திருந்துவிடப்பட்ட 35,000 கனஅடி நீர் திருச்சி அணையை அடையும் என எதிர்பார்க்கப் படுகிறது.
இதனால், திருச்சி காவேரி மற்றும் கொள்ளிடம் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், சலவைத் தொழிலாளர்கள் தங்களது உடைமைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும், காவேரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ கால்நடைகளை அழைத்து செல்லக்கூடாது, பொதுமக்கள் செல்பி எடுக்க தடை விதித்து, திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ