Enter your Email Address to subscribe to our newsletters
கிருஷ்ணகிரி, 22 அக்டோபர் (ஹி.ச.)
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேளாண் சார்ந்த படிப்பு முடித்தவர்கள், உழவர் நல சேவை மையம் அமைக்க விண்ணப்பிக்கலாம் என அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேளாண் விற்பனை மற்றும் வணிக துறையின் மூலம், 30 சதவீத மானியத்தில் உழவர் நல சேவை மையம் (உரக்கடை) அமைக்க விண்ணப்பிக்கலாம். முதல்வரின் உழவர் நல சேவை மையம் திட்டத்தில், 10 லட்சம் ரூபாய் முதல், 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான மையங்கள் அமைக்க, 30 சதவீத மானியமாக, 3 லட்சம் ரூபாய் முதல், 6 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும்.
இத்திட்டத்தில் பயன்பெற, வயது வரம்பு 20 முதல், 45 வரை. வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் வணிகம், வேளாண்மை பொறியியல் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு படித்திருக்க வேண்டும். உரிய வங்கியில் விரிவான திட்ட அறிக்கையுடன் கடன் பெற விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு, வேளாண்மை துணை இயக்குனர் (வேளாண் வணிகம்), ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், எண்.57, அம்சா உசைன் தெரு, புதுப்பேட்டை, கிருஷ்ணகிரி என்ற முகவரியிலோ அல்லது 94430 81440 என்ற மொபைல் எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b