Enter your Email Address to subscribe to our newsletters
மதுரை, 22 அக்டோபர் (ஹி.ச.)
மதுரை பழங்காநத்தம் பகுதியில் மாநகராட்சி 71, 72, 74 ஆவது வார்டுகளுக்கான கணிணி வரிவசூல் மையம் மற்றும் சுகாதார ஆய்வாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இந்த மாநகராட்சி அலுவலகம் பழமையான கட்டிடம் என்பதால் நேற்றுபெய்த மழை காரணமாக திடிரென இன்று காலை மேற்கூரை பூச்சு அடுத்தடுத்து பெயர்ந்து விழுந்து விபத்து - நல்வாய்ப்பாக அதிகாரிகள், பொதுமக்கள் தலையில் விழாமல் தப்பினர்.
கட்டிட்டத்தில் அடுத்தடுத்த பகுதிகளில் பூச்சு பெயர்ந்து விழுவதால் அதிகாரிகள், பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
பழமையான கட்டிடங்களை இடிப்பதற்கு மாநகராட்சி மூலம் நோட்டீஸ் வழங்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்,
நிலையில் மாநகராட்சி அலுவலக கட்டிடங்களே பழமையான கட்டிடங்களாக செயல்பட்டு வருவதால் இது போன்ற விபத்து தொடர்ந்து நடந்து வருகிறது.
Hindusthan Samachar / ANANDHAN