Enter your Email Address to subscribe to our newsletters
விழுப்புரம், 22 அக்டோபர் (H.S.)
வடகிழக்கு பருவ மழை தொடங்கிய நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் வங்கக்கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து புயலாக மாறாமல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி வருகின்ற 25ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என விழுப்புரம் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட கடலோர பகுதிகளான மரக்காணம் அனுமந்தை, செட்டிகுப்பம், பொம்மையார்பாளையம், கோட்டகுப்பம், முதலியார் சாவடி உள்ளிட்ட 19 மீனவ கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் தங்கள் படகுகள் மற்றும் மீன்பிடி உபகரங்களை கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைத்து பாதுகாத்து வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN