Enter your Email Address to subscribe to our newsletters
மயிலாடுதுறை, 22 அக்டோபர் (ஹி.ச.)
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 16ஆம் தேதி துவங்கி பரவலாக விட்டுவிட்டு மழை பெய்து வந்த நிலையில், 20, 21 ஆகிய இரண்டு தேதிகளில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
நீடூர் அருண்மொழித்தேவன், பாக்கம், பொன்னூர் கட்டளை சேரி, மகாராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 5 ஆயிரம் ஏக்கரில் இளம் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கின.
இது போல் கோனேரிராஜபுரம் பகுதியிலும், கொள்ளிடம் ஒன்றியத்தின் பனங்குடி ஊராட்சியில் பழைய பாளையம் வாய்க்காலில் ஆகாய தாமரைகள் மண்டியதால் தண்ணீர் வடிவதில் சிக்கல் ஏற்பட்டது.
ஆனந்ததாண்டவபுரம் பகுதியில் முத்தப்பன் வாய்க்காலில் சேர்ந்த ஆகாயத்தாமரை காரணமாக 2000 ஏக்கரில் வெள்ளநீர் வடிய முடியாத நிலைமை ஏற்பட்டது. இந்நிலையில் ஜெயா செய்திகள் எதிரொலியாக ஆனதாண்டவபுரம் முத்தப்பன் வாய்க்கால் பகுதியில் தூர்வாரும் பணியில் நீர்வளத் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
அதே நேரம் பணங்குடி ஊராட்சி பழையபாளையம் வாய்க்கால் குத்தாலம் தாலுகா கோனேரிராஜபுரம் வாய்க்கால் ஆகியவற்றில் விவசாயிகள் பாதிப்பை தடுக்க தாங்களாக முன்வந்து ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அரசு இந்த ஆண்டு தூர்வாரும் பணிகளுக்கு போதிய நிதி ஒதுக்காத நிலையிலும், ஒதுக்கிய நிதி பற்றாக்குறை காரணமாகவும், நிதி ஒதுக்கியதில் ஏற்பட்ட முறைகேடு காரணமாகவும் தூர்வாரும் பணிகள் தரமற்று இருந்ததால் சிறிய இரண்டு நாள் மழைக்கு வெள்ளநீர் வழியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN