அமைச்சர் துரைமுருகனுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கை வேலூர் நீதிமன்றத்தில் இருந்து சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியது ஏன் - உயர்நீதிமன்றம் கேள்வி?
சென்னை, 22 அக்டோபர் (ஹி.ச) அமைச்சர் துரைமுருகனுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கை வேலூர் நீதிமன்றத்தில் இருந்து சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியது ஏன்? என காவல் துறை விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனக்கு எதிரான சொத
High


சென்னை, 22 அக்டோபர் (ஹி.ச)

அமைச்சர் துரைமுருகனுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கை வேலூர் நீதிமன்றத்தில் இருந்து சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியது ஏன்? என காவல் துறை விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கை, வேலூர் நீதிமன்றத்துக்கு மாற்ற மறுத்து, சென்னை எம்பி – எம்எல்ஏக்கள் சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அமைச்சர் துரைமுருகன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் விடுவித்த உத்தரவை ரத்து செய்ததை எதிர்த்த வழக்கில், சென்னை சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது என துரைமுருகன் தரப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த வழக்கை வேலூர் நீதிமன்றத்தில் இருந்து சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியது ஏன்?எனகாவல் துறை விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கின் விசாரணை நவம்பர் 24 ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ