Enter your Email Address to subscribe to our newsletters
புதுடெல்லி, 22 அக்டோபர் (ஹி.ச.)
உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தனது 61வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். பிறந்த நாளை முன்னிட்டு அமித்ஷாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில் வெளியிட்ட வாழ்த்து செய்தியில்,
அமித்ஷாவுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துகள். பொதுச்சேவையில் அமித்ஷா காட்டும் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்புக்காக பலராலும் பாராட்டப்படும் நபராக உள்ளார்.
நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும் ஒவ்வொரு இந்தியரும் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்துடன் வாழ்வதை உறுதி செய்யவும் அவர் மேற்கொண்டு வரும் முயற்சிகள் பாராட்டத்தக்கது.
அமித்ஷா நீண்ட காலம் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b