தீபாவளி பண்டிகை முடிந்து ஊர் திரும்பும் மக்கள் - சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்
சென்னை, 22 அக்டோபர் (ஹி.ச.) கடந்த அக் 20 ஆம் தேதி தீபாவளியை சொந்த ஊர்களில் கொண்டாட சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். குறிப்பாக, சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி
தீபாவளி பண்டிகை முடிந்து ஊர் திரும்பும் மக்கள் - சென்னையில் கடும் போக்குவரத்து நெருக்கடி


சென்னை, 22 அக்டோபர் (ஹி.ச.)

கடந்த அக் 20 ஆம் தேதி தீபாவளியை சொந்த ஊர்களில் கொண்டாட சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர்.

குறிப்பாக, சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி வழியாக சுமார் 1.60 லட்சம் வாகனங்களில் பல லட்சம் மக்கள் கடந்து சென்றனர்.

தீபாவளிக்கு மறுநாளான நேற்றும்(அக் 21) விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தீபாவளி விடுமுறை நிறைவடைந்த நிலையில் மக்கள் சென்னை திரும்பி வருகின்றனர். இதனால் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

உளுந்தூபேட்டை, செங்கல்பட்டு உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் நிலையில் நெரிசலை குறைக்க கூடுதல் கவுன்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.

மழையால் வாகனங்கள் வேகமாக இயக்கப்படவில்லை. இதனால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நெரிசல் ஏற்பட்டது.

விழுப்புரம் மேல வீதியில் நெரிசல் காரணமாக புறவழிச்சாலை வழியாக போக்குவரத்து திருப்பி விடப்பட்டது.

Hindusthan Samachar / vidya.b