தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க இன்று 4- வது நாளாக தடை
தூத்துக்குடி, 22 அக்டோபர் (ஹி.ச.) தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில், ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலவுவதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரியிலும் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அடுத்த ஏழு
தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க இன்று 4வது நாளாக தடை


தூத்துக்குடி, 22 அக்டோபர் (ஹி.ச.)

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில், ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலவுவதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரியிலும் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அடுத்த ஏழு நாட்களுக்கு, தமிழகத்தில் மழை தொடரும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று

(அக் 22) ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனால் மறு அறிவிப்பு வரும் வரை தூத்துக்குடியில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இன்று 4வது நாளாக விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

இதையடுத்து 272 விசைப்படகுகள் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்குச் செல்லாததால் சுமார் 10,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b