Enter your Email Address to subscribe to our newsletters
திருவண்ணாமலை, 22 அக்டோபர் (ஹி.ச.)
திருவண்ணாமலை மாநகரில் அமைந்துள்ள அருணாசலேஸ்வரர் கோவிலின் கிரிவலப் பாதையில் உள்ள வட வீதி சிவசுப்பிரமணியர் கோவிலில் ஏராளமான முருக பக்தர்கள் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர்.
ஐப்பசி மாத அமாவாசைக்கு மறுநாள் பிரதமை திதியில் இருந்து சஷ்டி திதி வரை ஆறு நாட்கள் மிகத் தீவிரமான சஷ்டி விரதத்தை முருக பக்தர்கள் கடைப்பிடிப்பார்கள்.
அந்த வகையில் வட விதி சுப்பிரமணியர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் கோவில் குருக்கள் இடம் காப்பு கட்டி சஷ்டி விரதத்தை தொடங்கினர்.
முன்னதாக சுப்பிரமணியருக்கு சீகக்காய் தூள், மஞ்சள் தூள், பச்சரிசி மாவு, பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், சந்தனம் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் செய்து மலர் மாலை அணிவித்து மகா தீபாரதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி கோவிலை சுற்றி வந்து விரதத்தை தொடங்கினர்.
சிவசுப்பிரமணியர் கோவிலில் இன்று முதல் விரதத்தை துவங்கிய முருக பக்தர்கள் ஆறாவது நாள் சஷ்டியில் சூரசம்கார நிகழ்வு நடைபெற்று அன்று விரதத்தை நிறைவு செய்வார்கள்.
Hindusthan Samachar / ANANDHAN