தக்காளி ஒரே நாளில் 20 ரூபாய் விலை உயர்வு
சென்னை, 22 அக்டோபர் (ஹி.ச) தக்காளி ஒரே நாளில் 20 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. சில்லறை விற்பனையில் கிலோ 50 ரூபாய்க்கும்,மொத்த விற்பனையில் கிலோ 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் மழையால் வரத்து குறைந்ததா
Tomato


சென்னை, 22 அக்டோபர் (ஹி.ச)

தக்காளி ஒரே நாளில் 20 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. சில்லறை விற்பனையில் கிலோ 50 ரூபாய்க்கும்,மொத்த விற்பனையில் கிலோ 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் மழையால் வரத்து குறைந்ததால் தக்காளி விலை உயர்ந்துள்ளது.

நேற்று கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் 20 ரூபாய் உயர்ந்து மொத்த விற்பனையில் கிலோ 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சில்லறை விற்பனை கடைகளில் கிலோ 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தக்காளி மட்டும் இன்றி மற்ற காய்கறிகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. தக்காளி வரத்தை பொறுத்து விலை உயரும் என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

Hindusthan Samachar / P YUVARAJ