டெல்டா மாவட்டங்கள் மழை பாதிப்பு உள்ள மாவட்டங்களுக்கு பார்வையிட அமைச்சர்களை முதலமைச்சர் அனுப்பி வைத்துள்ளார் – உதயநிதி ஸ்டாலின் தகவல்
சென்னை, 22 அக்டோபர் (ஹி.ச.) சென்னை ரிப்பன் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள அவசரகால கட்டுப்பாட்டு மையத்தினை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, தொலைபேசி வாயிலாக பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். சென்னை மாந
Udhay


சென்னை, 22 அக்டோபர் (ஹி.ச.)

சென்னை ரிப்பன் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள அவசரகால கட்டுப்பாட்டு மையத்தினை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, தொலைபேசி வாயிலாக பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

சென்னை மாநகராட்சி கட்டுபாட்டுமையத்தை ஆய்வு மேற்கொண்ட துணை முதலமைச்சர் கட்டுபாட்டு மையத்தின் உதவி எண்ணுக்கு வந்த அழைப்பை பேசிய நிலையில், தொடர்ந்து நுங்கம்பாக்கம் ஜெயசங்கர் சாலைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது,

காலை 4 மணி முதல் மழை பாதிப்பு குறித்த ஆய்வுகளை நேரடியாக பார்த்து வருகிறோம்.

முகாம்களின் உணவுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் வரும் புகார்களை அடிப்படையாகக் கொண்டு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம்.

சென்னை மாநகராட்சி கட்டுப்பட்டு அறைக்கு நானே நேரடியாக சென்றேன். அங்கு சில புகார்களை கேட்டிருந்து நானே அந்த பகுதிகளுக்கு வருகிறேன் என்று கூறினேன்.

டெல்டா மாவட்டங்கள் மழை பாதிப்பு உள்ள மாவட்டங்களுக்கு பார்வையிடுவதற்கு அமைச்சர்களை தமிழ்நாடு முதலமைச்சர் அனுப்பி வைத்துள்ளார்.

மாவட்ட ஆட்சித் தலைவருடன் முதல்வர் பேசியிருக்கிறார் எல்லா இடத்திலும் எச்சரிக்கையாக இருக்கிறோம் எனத் தெரிவித்தார்.

Hindusthan Samachar / P YUVARAJ