Enter your Email Address to subscribe to our newsletters
கள்ளக்குறிச்சி, 22 அக்டோபர் (ஹி.ச.)
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பாளையப்பட்டு தெருவில் வசித்து வரும் வேலாயுதம் மகன் முருகன் 58 என்பவர் மண்பாண்ட தொழில் செய்து வரும் ஏழை தொழிலாளி.
இந்த நிலையில் உளுந்தூர்பேட்டை பகுதியில் தொடர்ந்து மூன்று நாட்களாக விட்டுவிட்டு பெய்து வரவேற்கிறது.
இந்த நிலையில் வழக்கம் போல் முருகன் இரவு படுத்து உறங்கிக் கொண்டிருந்த போது திடீரென தனது வீட்டின் சுவர் இடிந்து வெளிப்பக்கமாக விழுந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
சுமார் 15 அடி உயரமுள்ள சுவர் திடீரென சரிந்து வீட்டின் வெளிப்புறம் விழுந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர்த் தப்பினார்.
ஏழை மண்பாண்ட தொழிலாளியான இவர் தற்பொழுது வாழ்வாதாரம் எதுவும் இல்லாமல் தொழில் செய்ய முடியாமலும் குடியிருக்க வீடு இல்லாமலும் நிற்கதியில் வீதியில் நிற்கும் மண்பாண்ட தொழிலாளி மாவட்ட நிர்வாகத்திற்கு வீடு வழங்க வேண்டி கோரிக்கை வைத்துள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN