வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு - மதுரையில் வாட்டி வதைக்கும் வெயில்
மதுரை, 22 அக்டோபர் (ஹி.ச.) மதுரை மாநகர் மற்றும் மாவட்ட முழுவதிலும் நேற்று அதிகாலை 6:00 மணி முதல் இரவு வரை தொடர்ச்சியாக பரவலான மழை பெய்து வந்தது. இந்நிலையில் இன்று காலை 9 மணி முதல் தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வெயில் கொளுத்தி வருவதால் வாக
Vaigai dam


மதுரை, 22 அக்டோபர் (ஹி.ச.)

மதுரை மாநகர் மற்றும் மாவட்ட முழுவதிலும் நேற்று அதிகாலை 6:00 மணி முதல் இரவு வரை தொடர்ச்சியாக பரவலான மழை பெய்து வந்தது.

இந்நிலையில் இன்று காலை 9 மணி முதல் தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வெயில் கொளுத்தி வருவதால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஓடுவதால் கோரிப்பாளையம், சிம்மக்கல், செல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் பிரதான சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

இதனால் கொளுத்தும் வெயிலில் நீண்ட நேரம் வாகன ஓட்டிகள் காத்திருப்பதால் வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் அவதிக்குள்ளாகினர்.

மதுரையில் 24 மணி நேரத்தில் தொடர்மழை மற்றும் கொளுத்தும் வெயில் என மாறி மாறி கால சூழல் உருவாகியுள்ளது.

நேற்று தொடர் மழை பெய்து வந்த நிலையில் இன்று காலை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் என மாணாக்கர்கள் எதிர்பார்த்த நிலையில், கடும் வெயிலின் தாக்கம் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / ANANDHAN