வீரநகரம் திரைப்படத்தின் தீபாவளி சிறப்பு போஸ்டர் வெளியீடு!
சென்னை, 22 அக்டோபர் (ஹி.ச.) இயக்குனர் வினோத்குமார் அவர்கள் இயக்கி நடிக்கும் வீரநகரம் திரைப்படத்தின் தீபாவளி சிறப்பு போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தில் மன்சூர்அலிகான் மைக்கேல்ராஜ் மஸ்காரா அஸ்மிதா மற்றும் பல பிரபலங்கள் நடித்துள்
வீர நகரம்


சென்னை, 22 அக்டோபர் (ஹி.ச.)

இயக்குனர் வினோத்குமார் அவர்கள் இயக்கி நடிக்கும் வீரநகரம் திரைப்படத்தின் தீபாவளி சிறப்பு போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

இத்திரைப்படத்தில் மன்சூர்அலிகான் மைக்கேல்ராஜ் மஸ்காரா அஸ்மிதா மற்றும் பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

தேனிசைத் தென்றல் தேவா குத்து பாடல் ஒன்றை பாடியுள்ளார்.

ஒளிப்பதிவாளராக விஜய்வெங்கட்,

இசை முகேஷ்முனுசாமி டிசைன் திராவிடநேசன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

மதுரை ரவுடிசத்தை மையமாகக் வைத்து உருவாகி இருக்கும் இத் திரைப்படம் தற்போது அனைத்து வேலைகளும் முடிந்து திரைக்கு வர தயாராக உள்ளது.

இது குறித்து இயக்குனரும் படத்தின் நாயகனுமான வினோத்குமார் தெரிவிக்கையில்,

இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா விரைவில் நடத்த உள்ளதாகவும் மற்றும் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / Durai.J