பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை - சென்னையில் 39 இடங்களில் சிறப்பு போலீஸ் கட்டுப்பாட்டு அறைகள் திறப்பு
சென்னை, 22 அக்டோபர் (ஹி.ச.) வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழ்நாட்டில் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தை சமாளிப்பதற்காக முன்ன
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை - சென்னையில்  39 இடங்களில் சிறப்பு போலீஸ் கட்டுப்பாட்டு அறைகள் திறப்பு


சென்னை, 22 அக்டோபர் (ஹி.ச.)

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழ்நாட்டில் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மழை வெள்ளத்தை சமாளிப்பதற்காக முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்யும்படி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து துறையினருக்கும் உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து சென்னை நகர போலீஸ் கமிஷனர் அருண் பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்துள்ளார்.

சென்னையில் 12 துணை கமிஷனர்கள் தலைமையில் மழை வெள்ளத்தை சமாளிக்க 12 பேரிடம் மீட்பு படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மத்திய, மாநில பேரிடர் மீட்பு படை வீரர்கள் மற்றும் நீச்சல் வீரர்கள் இந்த பேரிடர் மீட்பு படைகளில் இடம்பெற்றுள்ளனர்.

இதுதவிர சென்னை நகர் முழுவதும் 39 இடங்களில் சிறப்பு போலீஸ் கட்டுப்பாட்டு அறைகளும் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மழை வெள்ளத்தை சமாளிக்க சென்னை போலீசார் தயார்நிலையில் இருப்பதாக போலீஸ் கமிஷனர் அலுவலக வட்டார உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தென்சென்னையில் மட்டும் 23 சிறப்பு மினி போலீஸ் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட மக்கள் தொலைபேசி எண் 100-ல் பேசி உதவி கேட்டால் உடனடியாக மீட்பு படையினர் சென்று உதவிக்கரம் நீட்டுவார்கள் என்றும் தென்சென்னை கூடுதல் கமிஷனர் டாக்டர் கண்ணன் தெரிவித்தார்.

Hindusthan Samachar / vidya.b