Enter your Email Address to subscribe to our newsletters
கோவை, 23 அக்டோபர் (ஹி.ச.)
மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதியான தொண்டாமுத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக உணவு, தண்ணீர் தேடி வனவிலங்குகள் ஊருக்குள் வருவது தொடர்ந்து வருகிறது.
அதில் யானைகள் ஒன்று மற்றும் கூட்டமாகவும் ஊருக்கு உலா வருகிறது. விலை நிலங்கள், கால்நடைகளுக்கு வைத்து இருக்கும் தீவனங்கள் மட்டும் வீடுகளை சேதப்படுத்தி செல்வது வாடிக்கையாகி விட்டது. இதனை தடுக்க அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இதனையடுத்து வனத் துறையினரும் பல்வேறு குழுக்கள் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு அதனை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அப்பகுதியில் மனித உயிருக்கு சேதத்தை ஏற்படுத்தி அச்சுறுத்தலாக இருந்து வந்த ஒற்றைக் காட்டு யானை ரோலக்ஸ்யை கடந்த வாரம் வனத் துறையினர் கும்கி யானைகள் உதவியுடன் பிடித்து பொள்ளாச்சி டாப்ஸ்லிப் யானைகள் முகாமிற்கு கொண்டு சென்றனர்.
இதனைத் தொடர்ந்து நேற்று இரவு கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள குப்பேபாளையம் விவசாயி நாகராஜ் என்பவர் தோட்டம் உள்ள பகுதிக்கு உணவு தேடி வந்த 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை ஒன்று அங்கு இருந்த மின் கம்பியை சாய்த்து உள்ளது.
இதனால் மின் கம்பம் யானையின் மீது விழுந்து மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து உள்ளது.
தகவல் அறிந்த அங்கு வந்த வனத் துறையினர் சம்பவ இடத்தில் யானை உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றன.
மேலும் இது குறித்து வனத்துறை கால்நடை மருத்துவர்கள் உடற்கூறு ஆய்வு செய்வதற்கு தகவல் அளித்து உள்ளனர்.
Hindusthan Samachar / V.srini Vasan