Enter your Email Address to subscribe to our newsletters
கோவை, 23 அக்டோபர் (ஹி.ச.)
அந்தமானை சேர்ந்த இளம் பெண் சென்னையில் கல்லூரியில் படிக்கும்போது, கோவையை சேர்ந்த மனோஜ்குமார் என்பவருடன் சமூக வலைதளம்மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அது காதலாகமாறி சுமார் 9 வருடங்கள் ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.
ஒருகட்டத்தில் திருமணம் செய்துவைப்பதாக கூறி மனோஜ்குமாரின் பெற்றோர் கூறியதை அடுத்து, சென்னையில் இருந்து கோவையில் இருவரும் ஒன்றாக தங்கி வந்துள்ளனர்.
இந்த நிலையில் திடீரென மனோஜிர்க்கு வசதி படைத்த பெண்ணுடன் திருமணம் நடத்த அவரது பெற்றோர் முடிவு செய்து இளம்பெண்ணை ஏமாற்றியுள்ளனர்.
இதனால் மனம் உடைந்த இளம்பெண் கரும்பத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகாரளித்தும் முறையான வழக்கு பதிவு செய்யாமல் அலைகழித்ததாகவும், சட்டபோராட்டம் நடத்தி தான் வழக்கு பதிவு செய்ய முடிந்தது என்றும் ஆதங்கப்படும் பாதிக்கப்பட்ட பெண்.
கடுமையான பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்தபிறகும், மனோஜ்குமார்மீது நடவடிக்கை எடுக்காமல் தற்போது பினையில் விடுகின்றனர்.
இதனால் எனது உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
காவல்துறை பொதுமக்களுக்கானதா? அல்லது அதிகாரம் படைத்தவர்களுக்காகவா ?என்று கேள்வி எழுப்பிய அந்த பெண், சட்டப்படி அனைத்து முயற்ச்சிகளையும் செய்து எந்த பயனும் இல்லாததால் தற்பொழுது ஊடகத்தினரை நம்பி வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / V.srini Vasan