Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 23 அக்டோபர் (ஹி.ச.)
நடிகரும் முக்குலத்தோர் புலிப்படை தலைவருமான கருணாஸ்,முதலமைச்சர் மு க ஸ்டாலினை இன்று சென்னை அறிவாலயத்தில் சந்தித்தார்.
இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கருணாஸ்,
வரும் 27 ஆம் தேதி நடைபெற உள்ள மருது சகோதர்கள் குருபூஜைக்கும், 30 ஆம் தேதி நடைபெற உள்ள முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவிலும் பங்கேற்பதற்காக அழைப்பு விடுத்ததாக கூறினார்.
மேலும், வரும் சட்டமன்ற தேர்தலில் மொழி, மக்கள் சார்ந்த கல்வி, பொருளாதாரம் வளர்ச்சி, அனைத்து நிலைப்பாடுகளுக்கும் மக்களுக்கான ஒரு நல்லாட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் வழங்குவார்.
பிஜேபியை எதிர்த்து இந்தியாவில் அவர்களின் அனைத்து சவால்களையும் சமாளித்துக் கொண்டிருக்கும் தமிழக முதலமைச்சர் ஒட்டுமொத்த இந்தியாவும் உற்றுப் பார்க்கக் கூடிய முதலமைச்சராக இருக்கிறார். மேலும் அவருடைய ஆட்சி தொடர வேண்டும் என்பதுதான் எங்களுடைய ஆசை.
பனையூரில் பூட்டு உள்ளே போட்டு இருக்கிறதா வெளியே போட்டு இருக்கிறதா என்று தான் பார்க்க வேண்டும்.
மக்களுக்கான அரசியல் என்பது மக்களுக்கானது. அந்த மக்களுக்கு பிரச்சனை என்கின்ற பொழுது அந்த அரசியலை செய்ய நினைப்பவர்கள் தான் மக்களுக்கு கஷ்டம் என்றால் அங்கு சென்று இருக்க வேண்டும்.
அங்கு சென்று நிற்க தவறியவர்களை நான் என்னவென்று சொல்வது. இதனை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என்றார்.
அதே நேரத்தில் அங்க பிரச்சனை என்கின்ற பொழுது நள்ளிரவே அங்கு சென்று உங்களுக்காக நான் இருக்கிறேன் என சொல்லக்கூடியவர் தான் தலைவர். அந்த இக்கட்டான சூழலில் மக்களுக்கு ஏற்பட்ட அந்த கொடுமையான சம்பவத்தில் உடனடியாக களத்தில் இறங்கி பணியாற்றியவர் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்றார்.
தவெக தலைவர் மக்களுக்கானவரா? என்று கேள்வி எழுப்பிய கருணாஸ் மக்களுக்கான பிரச்சனைக்கு களத்தில் இறங்கக் கூடியவரா? என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.
பிஜேபி நேரடியாக என்றுமே எதிலுமே வர மாட்டார்கள். ஆனால் என்றுமே சந்தில் சிந்து பாடி பாட்டை கம்போஸ் செய்வதற்கு நினைப்பார்கள். அதன்படி, பாஜக கம்போஸ் பண்ணும் பாட்டிற்கு நல்ல நடனமாடும் நடிகர் கிடைத்துள்ளார்.
அதிமுக என்பது புரட்சித் தலைவர் உருவாக்கிய மாபெரும் இயக்கம், அதனை மறைந்த முதலமச்சர் ஜெயலலிதா பாதுகாத்து என்னை போன்றவர்களுக்கு அரசியல் அடையாளம் கொடுத்த கட்சி. ஆனால் இன்று அவர்கள் நடத்தும் கூட்டத்திற்கு அவர்கள் கட்சி கொடியை பிடிக்காமல் மற்றவர்களின் கட்சிக்கொடியை அவர்கள் நிர்வாகிகளே பிடித்துள்ளனர். இவை அனைத்தும் எடப்பாடி தலைமையிலான அவல நிலைதான் காரணம்.
பதவிக்காக எதையும் செய்ய துணிந்தவர் எடப்பாடி என்பது இதன் மூலமாகவே அம்பலமாகியுள்ளது. தனக்காக மாபெரும் இயக்கத்தை, எந்தவிதமான ஒரு கட்டமைப்பே இல்லாத ஒரு காற்றாறை போன்று வெள்ளப்பெருக்காக ஓடுகின்ற ரசிகர் கூட்டத்தை நம்பி, அவர்கள் கையில் இவர்களே செட் செய்து கொடியை எடுத்து கொண்டு இருக்கிறார்கள். இதனை அதிமுக தொண்டர்கள் பலர் குமரிக் கொண்டு இருக்கிறார்கள், இதனை பலரும் எனக்கு தெரிவிக்கின்றனர்.
இவற்றுக்கெல்லாம் முதல் காரணம் எடப்பாடித்தான். அவருடைய சுயநலத்திற்காக அந்த கட்சியை கூட அடமானம் வைத்து விட்டு போனாலும் போவார்.
அதில் ஆச்சரியம் அடைவதற்கும் ஒன்றும் இல்லை என்று கருணாஸ் குறிப்பிட்டு பேசியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ