தென்காசியில் வடகிழக்கு பருவமழை தீவிரம் - வேகமாக உயரும் அணைகளின் நீர்மட்டம்
தென்காசி, 23 அக்டோபர் (ஹி.ச) வடகிழக்கு பருவமழையானது தீவிரமடைந்து தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர் கனமழையானது பெய்து வரும் நிலையில், இந்த மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில
Adavinainar Dam


தென்காசி, 23 அக்டோபர் (ஹி.ச)

வடகிழக்கு பருவமழையானது தீவிரமடைந்து தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர் கனமழையானது பெய்து வரும் நிலையில், இந்த மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து தொடர்ந்த அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாக, தென்காசி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வரும் நிலையில், தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 அணைகளின் நீர்மட்டங்களும் வேகமாக உயர்ந்து வருகிறது.

குறிப்பாக, 85 அடி உயரம் கொண்ட கடனாநதி அணையின் நீர்மட்டம் தற்போது 57 அடியாக உள்ள நிலையில், அணைக்கு சுமார் 66 கன அடி நீரானது வந்து கொண்டிருக்கிறது.

அதேபோல் 84 அடி உயரம் கொண்ட ராமநதி அணையின் நீர்மட்டம் தற்போது 67 கனஅடியாக உள்ள நிலையில், அணைக்கு 40 கனஅடி நீரானது வந்து கொண்டிருக்கிறது.

72 அடி உயரம் கொண்ட கருப்பாநதி அணையின் நீர்மட்டம் தற்போது 57.75 கனஅடியாக உள்ள நிலையில் அணைக்கு 25 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

36 அடி உயரம் கொண்ட குண்டாறு அணையின் நீர்மட்டமானது அதன் முழு கொள்ளளவை எட்டி உள்ள நிலையில், அணைக்கு வரும் 148 கன அடி நீர் அப்படியே வெளியேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

132 அடி உயரம் கொண்ட அடவிநயினார் கோவில் நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு தற்போது 121 அடியாக உள்ள நிலையில், தற்போது அணைக்கு 44 கன அடி நீரானது வந்து கொண்டிருக்கிறது.

குறிப்பாக, மேற்கண்ட 5 அணைகளில், ராமநதி, கருப்பாநதி, குண்டாறு உள்ளிட்ட மூன்று அணைகளிலும் அணைக்கு வரும் நீர்வரத்து அப்படியே வெளியேற்றம் செய்யப்பட்டு வரும் நிலையில், அடவிநயினார் கோவில் நீர்த்தேக்கம் மற்றும் கடனாநதி நீர்த்தேக்கத்தில் அணைக்கு வரும் நீர்வரத்தில் 70 சதவீதத்திற்கு மேல் வெளியேற்றம் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / ANANDHAN