Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 23 அக்டோபர் (ஹி.ச.)
சுபமுகூர்த்த நாட்களில் பத்திரப்பதிவு அலுவலகங்களில் பொதுவாக புதிய முன்பதிவுகள் அதிகம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், புரட்டாசி மாதம் முடிந்து ஐப்பசி மாத சுபமுகூர்த்த தினங்களில் அதிக அளவில் பத்திரப்பதிவு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் அடிப்படையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்ள்ளனர்.
இதையடுத்து ஐப்பசி மாத முகூர்த்த நாட்கள் என்ற அடிப்படையில் வரும் 24-ந்தேதி(நாளை) மற்றும் 27-ந்தேதி ஆகிய இரு தினங்களில் கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இதன்படி வழக்கமாக 100 டோக்கன்கள் வழங்கப்படும் அலுவலகங்களில் 150 டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
அதேபோல் 200 டோக்கன்கள் வழங்கப்படும் அலுவலகங்களில், 300 டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
மேலும் அதிக பத்திரப்பதிவு நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு கூடுதலாக சாதாரண மற்றும் தட்கல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பதிவுத் துறை தகவல் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b