தோட்டத்திற்குள் புகுந்த சிறுத்தை வளர்ப்பு நாயை கவ்விச் சென்றது
கோவை, 23 அக்டோபர் (ஹி.ச.) கோவை மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள பகுதிகளான மதுக்கரை, தொண்டாமுத்தூர் சுற்று வட்டார பகுதிகளான எட்டிமடை, மதுக்கரை, நரசிபுரம், பேரூர், தீத்திபாளையம், தடாகம், மருதமலை போன்ற பகுதிகளில் உணவு, தண்ணீர் தேடி வனவிலங்குகள் ஊரு
CCTV footage has emerged showing a leopard entering a garden near Ettimadai in Coimbatore and carrying away a pet dog, which has caused shock among the people.


கோவை, 23 அக்டோபர் (ஹி.ச.)

கோவை மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள பகுதிகளான மதுக்கரை, தொண்டாமுத்தூர் சுற்று வட்டார பகுதிகளான எட்டிமடை, மதுக்கரை, நரசிபுரம், பேரூர், தீத்திபாளையம், தடாகம், மருதமலை போன்ற பகுதிகளில் உணவு, தண்ணீர் தேடி வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து தோட்டங்களில் உள்ள பயிர்கள், கால்நடைகளுக்கு வைத்து இருக்கும் தீவனங்கள் மற்றும் வீடுகள், கடைகள் வைத்து இருக்கும் உணவுப் பொருட்களை உண்டு செல்வது தொடர் கதையாக அரங்கேறி வருகிறது.

அதனை தடுக்க சுற்றுவட்டார கிராம மக்கள் தொடர்ந்து தமிழக அரசு மற்றும் வனத் துறையினரிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுக்கரை சுற்று வட்டார பகுதியில் சிறுத்தை புலி அங்கு வளர்க்கப்பட்டும் கால்நடை மற்றும் கோழி போன்றவற்றை வேட்டையாடி சென்றது.

அங்கு வனத்துறையினர் கண்காணிப்பு கேமரா வைத்து கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் இன்று எட்டிமடை பகுதியில் உள்ள ஜெகநாதர் என்பவர் தோட்டத்தில் நாய் ஒன்று வளர்த்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முதல் அந்த நாயை காணவில்லை, அதனைத் தேடிப் பார்க்கும் போது எங்கும் கிடைக்கவில்லை இந்நிலையில் கண்காணிப்பு கேமராவை பார்த்த போது தோட்டத்திற்குள் புகுந்த சிறுத்தை.

அங்கு வளர்க்கப்பட்டு இருந்த நாயை கவ்விக் கொண்டு சென்றது தெரியவந்தது.

அதிர்ச்சி அடைந்தவர் இதுகுறித்து வனத் துறையினர் தகவல் தெரிவித்தார்.

மேலும் அந்தக் கண்காணிப்பு கேமரா காட்சிகளை சமூக வலைதளத்தில் பதிவு செய்து அப்பகுதி பொதுமக்களும் விவசாயிகளும் எச்சரிக்கையையுடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Hindusthan Samachar / V.srini Vasan