Enter your Email Address to subscribe to our newsletters
புதுடெல்லி, 23 அக்டோபர் (ஹி.ச.)
பண்டிகை காலத்தையொட்டிய தொடர் விடுமுறையால் பயணிகள் வசதிக்காக 12,075 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டதாக மத்திய ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
மக்களுக்கான சேவை மற்றும் நம்பகத்தன்மையைப் பெறும் வகையில் ரயில்வே துறை செயல்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
மேலும், மாநிலவாரியாக இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களின் எண்ணிக்கை குறித்தும் பட்டியலிட்டுள்ளது.
இதில், அதிகபட்சமாக பிகார் - 2,220 சிறப்பு ரயில்கள், மகாராஷ்டிரம் - 2,190 ரயில்கள், உத்தரப் பிரதேசம் - 1,170 ரயில்கள், ராஜஸ்தான் - 961, குஜராத் - 839, கர்நாடகம் - 528, ஹரியாணா - 344 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன.
குறைந்தபட்சமாக அருணாசலப் பிரதேசம் 16, சண்டிகர் - 30, கோவா - 61, திரிபுரா - 90 ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிற்கு 281 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன.
அண்டை மாநிலங்களாக கேரளம் - 257, ஆந்திரம் - 382, தெலங்கானா - 307 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM