கோவில் நிதியில் வணிக வளாகங்கள் கட்ட கூடாது -சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, 23 அக்டோபர் (ஹி.ச.) கந்தக்கோட்டம் கோவில் நிலத்தில் வணிகவளாகம், குடியிருப்புகள் கட்ட தடை கோரி வில்லிவாக்கத்தை சேர்ந்த ஏ.பி.பழனி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கந்தக்கோட்டம் முத்துக்குமார சுவாமி கோவிலுக
Hrce


சென்னை, 23 அக்டோபர் (ஹி.ச.)

கந்தக்கோட்டம் கோவில் நிலத்தில் வணிகவளாகம், குடியிருப்புகள் கட்ட தடை கோரி வில்லிவாக்கத்தை சேர்ந்த ஏ.பி.பழனி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள்,

கந்தக்கோட்டம் முத்துக்குமார சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடங்களில் வணிக வளாகங்களும், குடியிருப்புகளும் கட்டும் பணிகளை தொடரலாம்.

கட்டுமானங்களை அறநிலையத் துறைச் சட்டப்படி, பக்தர்கள் வசதிக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

கோவில் நிதியில் வணிக வளாகங்கள் கட்ட கூடாது என தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோவில்களுக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும்,என இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும்,நவம்பர் 22 ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசு, கோவில் நிர்வாகத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ