Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 23 அக்டோபர் (ஹி.ச.)
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த 25ம் தேதி தென்காசி மாவட்டத்திற்கு செல்வதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் கனமழை காரணமாக நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்ட நிலையில் வரும் 29ம் தேதி முதல்வர் தென்காசி செல்ல உள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
அக் 29 ஆம் தேதி அரசு சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார்.
29ம் தேதி காலை சென்னையில் இருந்து புறப்பட்டு 10.30 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையம் செல்லும் முதல்வர், அங்கிருந்து சாலை மார்க்கமாக தென்காசி செல்கிறார்.
வழியில் 11.30 மணிக்கு ஆலங்குளத்தில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்படுகிறது.
மதியம் குற்றாலம் சுற்றுலா மாளிகையில் தங்கி விட்டு மாலை 4 மணிக்கு நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
நிகழ்ச்சி முடிந்த பின்னர் சாலை மார்க்கமாக ராஜபாளையம் வழியாக மதுரை சென்று இரவு அங்கு தங்குகிறார்.
மறுநாள் 30ம் தேதி அங்கிருந்து புறப்பட்டு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெறும் தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொண்டு தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
Hindusthan Samachar / vidya.b