Enter your Email Address to subscribe to our newsletters
நாமக்கல், 23 அக்டோபர் (ஹி.ச.)
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதியின் திமுக எம்.எல்.ஏ.வாக பதவி வகித்து வந்த பொன்னுசாமி (வயது 74) கொல்லிமலையில் உள்ள அவரது வீட்டில் வசித்து வந்தார்.
எம்.எல்.ஏ. பொன்னுசாமி வழக்கமான தனது இரவு உணவுகளை எடுத்துக்கொண்டு நேற்று (22.10.2025) இரவு உறங்கியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து இன்று (23.10.2025) காலை அவருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது.
இதனைக் கண்ட அவரது உறவினர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் கொல்லிமலையில் இருந்து நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமணைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பொன்னுசாமி ஏற்கனவே உயிரிந்ததாக கூறியுள்ளனர்.
மேலும் அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
மறைந்த பொன்னுசாமி தொடக்க காலத்தில் அதிமுகவில் பதவி பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார்.
அதனை தொடர்ந்து கடந்த 2006ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். அதோடு 2006 ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை திமுக சட்டமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்து வந்தார்.
அதனைத் தொடர்ந்து 2011 மற்றும் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்ப்பை இழந்தது குறிப்பிடத்தக்கது.
இவரது மறைவு சேந்தமங்கலம் தொகுதி மக்கள், திமுகவினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் எம்.எல்.ஏ. பொன்னுசாமி மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b