Enter your Email Address to subscribe to our newsletters
கோவை, 23 அக்டோபர் (ஹி.ச.)
தீபத்திருநாளாம், தீபாவளி பண்டிகையையொட்டி, அனைவரும் புத்தாடைகள் உடுத்தி கொண்டாடும் வகையில், திமுகவினர் புத்தாடை, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
கோவை கோவில்மேடு பகுதியில், கோவை மாநகர் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளரும், ஜிஎம். பவுண்டேசன் நிர்வாக இயக்குனருமான எம்.சிவராமன் கோவில்மேட்டு பகுதியில், .300 க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் மற்றும் திமுகவினருக்கு புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசுகளை வழங்கி கெளரவித்தார்.
இதில், நடராஜன், ஷியாம்,இலட்சுமணன்,சிவபாலன், சிவக்குமார், அன்புராஜ், நரேஷ்குமார், , மற்றும் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / V.srini Vasan