Enter your Email Address to subscribe to our newsletters
சிவகங்கை, 23 அக்டோபர் (ஹி.ச.)
நாளை(அக்.24 ஆம் தேதி) மருதுபாண்டியர் குருபூஜை நடைபெறுவதை ஒட்டி சிவகங்கை மாவட்டத்தில் 163(1) சட்டத்தில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குருபூஜையையொட்டி அக்.23, 24ல் திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை, திருப்புவனத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விடுதலை போராட்ட வீரர்களான மருது பாண்டியர்களின் குருபூஜை விழா வருகிற 24-ம் தேதி காளையார்கோவிலில் உள்ள அவர்களின் நினைவிடத்தில் கடைபிடிக்கப்பட உள்ளதை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மருது பாண்டியர்களின் குருபூஜையில் பங்கேற்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து அரசியல் கட்சி தலைவர்கள், சமூக அமைப்பினர் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் திரளவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல், ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் வரும் 30 ஆம் தேதி தேவர் ஜெயந்தி விழா நடைபெற உள்ளது. அந்த விழாவிலும் சிவகங்கை மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் அஞ்சலி செலுத்த செல்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்வுகள் காரணமாக மக்கள் திரள்களை கட்டுப்படுத்தவும், சட்டம்-சமாதானத்தை நிலைநிறுத்தவும் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
அதன் ஒரு பகுதியாக, சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில், ஆட்சியர் கா. பொற்கொடி மாவட்டம் முழுவதும் வருகிற 23 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை 163(1) சட்டத்தில் தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதே போல் குருபூஜையை முன்னிட்டு அக்.23, 24ல் திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை, திருப்புவனத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b