நெல் கொள்முதலில் முன்னேற்பாடுகளை திமுக அரசு செய்யத் தவறியதே குளறுபடி ஏற்பட காரணம் – முன்னாள் அமைச்சர் காமராஜ்
சென்னை, 23 அக்டோபர் (ஹி.ச.) டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேங்கி கிடப்பது குறித்தும் , அறுவடைக்கு தயாராக இருந்த நெல்மணிகள் முளைத்து வீணாகியுள்ளது குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று நேரில் ஆய
Kamaraj


சென்னை, 23 அக்டோபர் (ஹி.ச.)

டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேங்கி கிடப்பது குறித்தும் , அறுவடைக்கு தயாராக இருந்த நெல்மணிகள் முளைத்து வீணாகியுள்ளது குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் காமராஜ் சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் காமராஜ்,

காவிரி டெல்டா பகுதியில் நெல் கொள்முதல் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது . டெல்டா மாவட்டம் முழுவதும் முளைத்த நெல் சாலை முழுவதும் கொட்டிக் கிடக்கிறது. டெல்டா விவசாயிகள் இந்த ஆண்டு தங்கள் வாழ்வாதாரத்தை தொலைத்துள்ளனர்.

கடந்த வாரமே இபிஎஸ் கவனத்திற்கு கொண்டு சென்று அறிக்கை தர வைத்தோம். ஆனாலும் அரசின் காதில் அது கேட்கவில்லை.

சில இடங்களுக்கு மட்டுமே உணவுத்துறை அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் செல்கின்றனர். ஆய்வின்போது விவசாயிகள் அமைச்சர்களிடம் பேசுவதை சிலர் தடுத்தனர்.

ஒரத்தநாட்டில் விவசாய சங்க பிரதிநிதிகளை இணைத்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். உணவுத்துறை அமைச்சர் வாய் திறந்தாலே பொய்தான் வருகிறது.

டெல்டாக்காரன் என்று சொல்லிக் கொள்ளும் முதலமைச்சர் பேரவையில் எதிர் கட்சித் தலைவர் பேசும்போது எந்த கருத்தையும் சொல்லவில்லை.

செறிவூட்டப்பட்ட அரிசிக்கான அனுமதியை வாங்கித் தருமாறு அதிமுகவை கேட்கின்றனர். நாங்கள் ஜீம்பூம்பா, வேலையா செய்ய முடியும்.

3.67 லட்சம் மெ. டன் தான் கடந்த ஆண்டில் குறுவை சாகுபடி நடந்துள்ளது.

இந்த ஆண்டு தீபாவளி டெல்டா விவசாயிகளுக்கு கண்ணீர் தீபாவளி ஆகிவிட்டது

தாலியை அடகு வைத்து சாகுபடி செய்ததாக இபிஎஸ் சிடம் பெண்மணி

கதறினார் , இபிஎஸ் கலங்கிவிட்டார்.

நெல் மூட்டை சுமப்பவர்களிடம் கேட்டபோது 800-900 மூட்டைகளே நாள்தோறும் கொள்முதல் செய்வதாக இபிஎஸ் சிடம் கூறினர். நாள்தோறும் 2 ஆயிரம் மூட்டை கொள்முதல் செய்வதாக பேரவையில் அமைச்சர்கள் கூறினர்.

செப்.17 ல் மத்திய அரசு செறிவூட்டப்பட்ட அரிசி கலப்பிற்கு உத்தரவு தரவில்லை என அமைச்சர் கூறினார். ஆனால் ஆக.18 ம் தேதியே செறிவூட்டப்பட்ட அரிசியை கலப்பதற்கான ஆணை மத்திய அரசிடம் இருந்து வந்து விட்டது.

கொள்முதல் நிலையங்கள் ஒவ்வொன்றிலும் 5-10 ஆயிரம் மூட்டைகள் தேங்கி கிடக்கின்றன.

கொள்முதல் தாமதத்தால் ஒரு லட்சம் ஏக்கரில் அறுவடை செய்யாமல் உள்ளனர். அவை மழையில் பாதிக்கப்பட்டு முளைவிடும் தருவாயில் உள்ளது. 30 லட்சம் மூட்டைகள் தேங்கி கிடக்கின்றன.

ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி வருகிறோம். எடப்பாடி ஆய்வு மேற்கொண்ட பின்னரே அமைச்சர்கள் ஆய்வுக்கு சென்றனர் .

மயிலாடுதுறை மாவட்டத்தில் குறுவை அறுவடை முன்கூட்டியே நிறைவடைந்திடும் அந்த மாவட்டத்தில் அமைச்சர் பார்க்கிறார்.

விவசாயிகள் கண்ணில் ஒற்றிக் கொள்ளும் விதமாக நான்கரை ஆண்டு கால ஆட்சியை தந்தவர் இபிஎஸ் , அவர் ஏன் பொய் சொல்ல வேண்டும்.?

எங்கள் 10 ஆண்டுகால ஆட்சியில் எப்போதேனும் இதுபோன்ற குளறுபடி இருந்ததா.?

நெல் கொள்முதல் குறித்த ஆய்வுக்காக எங்கள் ஆட்சியில் முன்கூட்டியே பொது மேலாளர்களை புதுக்கோட்டை மாவட்டம் வரை ஆய்வுக்கு அனுப்பி விடுவோம்.

அறுவடைக்கு முன்பே விவசாயிகள், மக்கள் பிரதிநிதிகளிடம் முத்தரப்பு கூட்டம் நடத்துவோம். அந்த கூட்டங்களின் அடிப்படையில் சாக்கு , சணல்களை 6 மாதம் முன்பே நாங்கள் கொள்முதல் செய்வோம். இதுபோன்ற கூட்டங்களை திமுக நடத்தவில்லை. 10 ஆண்டுகால ஆட்சியில் 12 லட்சம் மெ.டன் அளவு கிடங்குகளை நாங்கள் அமைத்தோம்.

டெல்டா மாவட்டங்களில் திறந்தவெளி சேமிப்பு கிடங்குகளை மூடியது தவறு. டெல்டாவில் மட்டும் 40 லட். மெ டன் கொள்ளவு கொண்ட கிடங்குகள் தேவைப்படும். அவற்றை முழுவதுமாக கட்ட முடியாது. எனவே திறந்த வெளி கிடங்குகள் இருப்பது அவசியம்.

நெல் கொள்முதலில் பெரிய குளறுபடி நடந்துள்ளது . கடந்த சனிக்கிழமை முதல் நேற்று வரை நெல் கொள்முதல் நடக்கவில்லை. 4 நாட்கள் கொள்முதலே நடக்கவில்லை. காரணம் நெல்லை தேக்கி வைக்க இடம் இல்லை.சர்க்கரை ஆலை குடோன்களை பயன்படுத்த போவதாக கூறுவது போகாத ஊருக்கு வழிகாட்டும் செயல்.

800 மூட்டை என்பதை ஆயிரம் மூட்டையாக உயர்த்தியது அதிமுக ஆட்சியில்தான்.

போதுமான முன் எச்சரிக்கை நடவடிக்கை இல்லாததே இந்த குளறுபடிக்கு காரணம்.

கணக்கெடுப்பு நடத்தி உரிய நிவாரணத்தை வழங்குமாறு எதிர்கட்சி தலைவர் கூறுவது தவறா..?

மத்திய அரசின் சேமிப்பு கிடங்குகளை வாடகைக்கு கூட பயன்படுத்த முடியும். ஆனால் திமுக அதிமேதாவித்தனமாக நடந்து கொண்டு அவற்றுடன் ஒப்பந்த்த்தை முடித்து கொண்டு விட்டனர்.

ஈரப்பத அளவை அதிகமாக்க முன்கூட்டியே மத்திய அரசிடம் அனுமதி வாங்கி இருக்க வேண்டும் . ஆனால் அமைச்சரே கொள்முதலுக்கு வரும் நெற்களில் 17 சதவீதம்தான் ஈரப்பதம் உள்ளது என கூறுகிறார்

சட்டப் பேரவையில் விவாதத்தின் போது பதில் கூற பேரவைத் தலைவர் எங்களை அனுமதிப்பதில்லை.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் காமராஜர் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ