Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 23 அக்டோபர் (ஹி.ச.)
தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் தேவாவின் இளைய சகோதரர் சபேஷ்
(வயது 68) உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (அக் 23) காலமானார்.
தேவாவிடம் உதவி இசையமைப்பாளராக தனது திரை பயணத்தை துவங்கிய சபேஷ், மற்றொரு சகோதரர் முரளியுடன் இணைந்து பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
தனித்தும் இவர் சமுத்திரம், தவமாய் தவமிருந்து, மாயாண்டி குடும்பத்தார் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
மேலும் தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்கள் சங்கத்தின் தலைவராகவும் சபேஷ் இருந்தார்.
இவரின் மகன் கார்த்திக் சபேஷ் திரைப்படங்களில் காமெடியனாக நடித்து வருகிறார்.
சென்னை ஆழ்வார் திருநகரில் உள்ள இல்லத்தில் சபேஷ் உடல் வைக்கப்பட்டுள்ளது.
இவரின் திடீர் மறைவிற்கு நடிகர்களும், இசை துறையில் இருப்பவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b