Enter your Email Address to subscribe to our newsletters
கள்ளக்குறிச்சி, 23 அக்டோபர் (ஹி.ச.)
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை அடிவாரத்தில் கோமுகி அணை அமைந்துள்ளது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 46 அடியாகும். அணையின் பாதுகாப்புக் கருதி, 44 அடி வரை தண்ணீர் சேமித்து வைத்து, திறக்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில், கல்வராயன்மலையில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில், கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக, இந்த அணையில் தற்போது 43 அடி வரை தண்ணீர் உயர்ந்துள்ளது. மேலும், அணைக்கு வினாடிக்கு 1100 கன அடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
இதையடுத்து, அணை வேகமாக நிரம்பி வருவதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கல்வராயன்மலையில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை நீடித்தால், 43 அடி வரை தண்ணீர் நிரம்பியுள்ளதால் மொத்த கொள்ளளவு கொண்ட 46 அடி மட்டுமே உள்ளதால், பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி 200 கன அடி நீர் வெளியேற்றப்பட இருப்பதால் கரையோர பகுதியில் வசித்து வரும் பொது மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் நீர்வளத்துறை அறிவித்துள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN