Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 23 அக்டோபர் (ஹி.ச.)
தமிழ்த் திரையுலகில் குணச்சித்திரம், நகைச்சுவை என பல்வேறு கதாப்பாத்திரங்களில் 1,000 படங்களுக்கு மேல் நடித்து சாதனை படைத்த பழம்பெரும் நடிகை மனோரமா கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் மறைந்தார்.
மனோரமாவின் ஒரே மகனான பூபதி நடிகர் விசுவின் 'குடும்பம் ஒரு கதம்பம்' படத்தில் அறிமுகமானார்.
அதன் பின்னர் சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தார்.
மகனுக்காக தூரத்து பச்சை என்ற படத்தையும் மனோரமா தயாரித்தார். ஆனால் அப்படம் சரியாக ஓடவில்லை. அதனை தொடர்ந்து சீரியல்கள் சிலவற்றிலும் பூபதி நடித்தார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள வீட்டில் வசித்து வந்த பூபதி
(வயது 70) மூச்சு திணறல் பிரச்னையால் அவதிப்பட்ட வந்த அவர்,
கடந்த வாரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டில் ஓய்வெடுத்து வந்தார்.
இந்நிலையில் தனது அம்மா மனோரமா பயன்படுத்திய கட்டிலிலேயே இன்று
(அக் 23) காலை இவரது உயிர் பிரிந்தது.
அவரது மரணத்துக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பூபதிக்கு ராஜராஜன் என மகனும், அபிராமி, மீனாட்சி என்ற மகள்களும் உள்ளனர். பூபதி உடலுக்கு நாளை இறுதி சடங்கு நடைபெறவுள்ளது.
Hindusthan Samachar / vidya.b