Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 23 அக்டோபர் (ஹி.ச.)
மாஞ்சா நூல் பயன்படுத்தி காற்றாடி பறக்கவிடுவது உயிரிழப்பு போன்ற விபத்துக்களை ஏற்படுத்தும் என்பதால் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண், இ.கா.ப., அவர்களின் செயல்முறை உத்தரவின் பேரில் சென்னை பெருநகர காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காற்றாடி மற்றும் மாஞ்சா நூல் தயாரிப்பது, விற்பனை செய்வது மற்றும் மாஞ்சா நூல் பயன்படுத்தி காற்றாடி பறக்க விடுவது தடை செய்யப்பட்டுள்ளது.
அதன்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தங்களது காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கண்காணித்து, காற்றாடி மற்றும் மாஞ்சா நூல் தயாரிப்பவர்கள், விற்பனை செய்பவர்கள் மற்றும் மாஞ்சா நூல் பயன்படுத்தி காற்றாடி பறக்கவிடுபவர்கள் கண்காணித்து கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, H-5 புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த தகவலின்பேரில், காவல் குழுவினர் நேற்று (22.10.2025) மாலை, வண்ணாரப்பேட்டை, ராமானுஜம் தெருவில் கண்காணித்தபோது, அங்குள்ள ஒரு வீட்டின் மொட்டை மாடியில், தடை செய்யப்பட்ட மாஞ்சா நூல் பயன்படுத்தி 3 நபர்கள் காற்றாடிகள் பறக்கவிட்டுக் கொண்டிருந்தது தெரியவந்தது.
அதன்பேரில், H-5 புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து, மேற்படி தடை செய்யப்பட்ட மாஞ்சா நூல் பயன்படுத்தி, காற்றாடிகள் பறக்கவிட்ட 1.அன்பழகன், வ/23, தண்டையார்பேட்டை, சென்னை, 2.குமரவேல், வ/31, தண்டையார்பேட்டை, சென்னை, 3.சலீம், வ/41, புதுவண்ணாரப்பேட்டை, சென்னை ஆகிய 3 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 4 காற்றாடிகள், 2 மாஞ்சா நூல்கண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது
மேலும், இதேபோல, நேற்று (22.10.2025) மாலை, புதுவண்ணாரப்பேட்டை, அம்மணி அம்மன் தோட்டம் பகுதியில் கண்காணித்து, அங்கு காற்றாடிகள் பறக்கவிட்டுக் கொண்டிருந்த 1.வெற்றிவேல், வ/24, தண்டையார்பேட்டை, சென்னை, 2.சதீஷ், வ/24, புதுவண்ணாரப்பேட்டை, சென்னை ஆகிய 2 நபர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து 10 காற்றாடிகள், 2 மாஞ்சா நூல்கண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது
கைது செய்யப்பட்ட 5 நபர்கள் மீதும் விசாரணைக்குப் பின்னர் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
Hindusthan Samachar / P YUVARAJ